Friday, March 5, 2010

நான்… உன் ஆண் குறி பேசுகிறேன்...!!!

நான் உன் ஆண் குறி பேசுகிறேன்...!
ஆம்... அதிர்ச்சி அடையாதே... சத்யமாக நான் தான் பேசுகிறேன்... நீ உன் மனதோடு பேசி பல நாட்களாக தூக்கமின்றி கஷ்படுவதை நானறிவேன்... நிச்சயமாக நீ பேச வேண்டியது உன் மனதோடல்ல... என்னுடன் தான்... உன் பிரச்சனைக்கு நானே காரணக்கர்த்தா... ஆதலால் உன் பிரச்சனையை தீர்க்க வேண்டியதும் நான் தான்...!

முகம் சுழிக்காதே...!
உன் பிரச்சனைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று ஐயம் கொள்ளாதே...!
ஐயமின்றி நம்பு... உன் பிரச்சனைக்கு நானே முழுமுதற் காரணம்...
நீ நம்ப மறுக்கலாம்... அல்லது இத்தனை நாட்களாக நீ புனிதம் பூசிய உன் காதலை நான் கொச்சைப்படுத்தி விட்டதாக என் மீது பெருங்கோபம் கொள்ளலாம்...!

உனக்கு விருப்பமில்லை என்பதற்காக... எதார்த்தம் எங்கும் ஒளிந்துக் கொள்ள போவதில்லை... எதார்த்தை சந்திக்க நீதான் அஞ்சுகிறாய்,,, நீதான் ஒளிந்துக்கொள்கிறாய்...!

நீ ஒரு பெண்ணை காதலித்தாய்... அவளும் உன்னைக் காதலித்தால்...
ஆனால் அவள் வெறொறுவனுடன் திருமணம் ஆகி சென்றுவிட்டால்... இது தானே உன் பிரச்சனையென்று நீ நம்புவது...?

காதல் என்ற சொல்லுக்கு நீ நம்பும் அர்த்தம் என்ன...? மறைவின்றிக் கூறு...

கட்டிளமை பருவத்தில் ஒருவர் மீது மற்றொருவருக்கு வரும் ஈர்ப்பை காதல் என்று நீ எண்ணுகிறாய்... நிச்சயம் அது காதல் இல்லை... அது பருவ மாற்றம்....!
நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நிகழ்ந்தே தீரும்...!

நீ விரும்பிய பெண் மற்றொருவருடன் நிச்சயம் செய்யப்பட்டபோது... முகத்தில் திராவகம் வீச துணிந்தையும் நான் அறிவேன்...! பின்பு அந்த முடிவைக் கைவிட்டு மதுக் கோப்பையில் நீ முழ்கியதையும் நான் அறிவேன்...!

இந்த முட்டாள்தனத்திற்கு நீ மட்டுமே முழுபொறுப்பென்று குற்றம் சுமத்த மாட்டேன்...!
நீ வாழும் சமூகம், காதலென்பது வாழ்வில் ஒரு முறை மட்டுமே வருமென்று பொய்யுரைக்கிறது... love is divine என்று காதலுக்கு புனித முழாம் பூசுகிறது,,,
தயவு செய்து இவற்றை நம்பாதே...! நீ இவற்றை நம்பியதால் தான்... ஒருமுறை தற்கொலை செய்யக் கூட துணிந்தாய்...!

காதல் என்ற பெயரால் உன்னை ஏமாற்றி உன்னிடம் பலப் பொருட்களை விற்க, உன்னை சுற்றி ஒரு வணிக கூட்டம் உலவுகின்றது... அவற்றின் சூழ்ச்சியே இவையனைத்தும்...!

நான் உளறுவதாய் நினைக்காதே...!

நிச்சயமாக காதல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வரும், ஒன்றுக்கு மேற்பட்டோருடனும் வரும்....! நீ எந்த காதலை தேர்ந்தெடுகிறாய் என்பதே உன் முன் உள்ள சவால்...
நீ எனக்கு விரைவில் உணவு படைக்க வேண்டும் என்ற அவசரத்தில் உன் காதலை தீர்மானிக்காதே... உன் அறிவின் பேச்சைக் கேள்...!
உனக்கு பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடு...!

மன்னித்துக்கொள்... காதலை என்னுடன் மட்டும் தொடர்புபடுத்தி பேசுவதற்காக... உன் காதல்களுக்கு நான் மட்டும் காரணமல்ல... ஆனால் உன் காதல்களில் நான் முக்கிய பங்கு வகிக்கிறேன்...!

ஒரு சின்ன வேண்டுகோள்... இது என்னுடயதல்ல... உன் செவிவுடைய வேண்டுகோள்... நீ கடந்த சில நாட்களாக... உன்னுடைய i pod ல் சோக பாடல்களாக பதிவேற்றம் செய்து அதை இம்சிக்கிறாயாமே...! தயவு செய்து பாடல்களை மாற்ற வேண்டுமாம்....!

8 comments:

 1. காதலில் வலி‍யை, இழப்பின் உணர்வினை இதை விட, அழகாக ஆழமாக யாராலும் சொல்ல முடியாது...

  ReplyDelete
 2. ரொம்ப நாளாக என் மனதில் அரித்துக் கொண்டிருந்த
  ஒரு விடயத்தை இவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்.
  இப்படியொரு பதிவை i didnt expect it from you

  keep it up

  ReplyDelete
 3. இவ்ளோ விசயம் சொல்றீங்களே...யாருண்ணே நீங்க...?
  பின்னிட்டீங்க போங்க...
  அதுலயும் அந்த சோகப் பாட்டு...
  பிரமாதம்!

  ReplyDelete
 4. ரொம்ப அற்புதமான பதிவு தோழர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete